'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் விஸ்வாசம் படத்தை தற்போது இயக்கி வருகிறார் சிவா. அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், அஜித் படத்தை அடுத்து சிவா இயக்கும் புதிய படத்தின் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டருந்தது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். அந்தப்படத்தை லிங்குசாமி இயக்குவதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு அப்படம் தொடங்கப்படவில்லை.
தற்போது அப்படத்தை சிறுத்தை சிவாவை வைத்து இயக்க அந்நிறுவனம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2019 கோடை விடுமுறையில் இப்படம் தொடங்கப்படும் என்கிறார்கள். விசுவாசம் வெளியானதும் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.