மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பல் டாக்டர் மனு பார்த்திபனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக அவரே தயாரிப்பாளராகி நடிக்கும் படம் டைம் இல்ல. அவருடன் மோனி, ஆதித்யா, அபிஷேக், சுப்பிரணியம், சுபராமன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கார்த்திகேயன் வேனு ஒளிப்பதிவு செய்கிறார். எல்.ஜி.பாலா இசை அமைக்கிறார். சதீஷ் கர்ணா இயக்குகிறார். படம் பற்றி மனு பார்த்திபன் கூறியதாவது:
சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது கனவு. அம்மா, அப்பா விருப்பத்துக்காக டாக்டருக்கு படித்தேன். என் விருப்பத்தை நிறைவேற்ற நடிக்கிறேன். கதையின் நாயகனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதனால் கோபம் அடையும் கோவில் பூசாரி 30 நாளில் நீ சாவாய் என்று சாபம் கொடுக்கிறார். ஆரம்பத்தில் அதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பூசாரி சொன்ன மாதிரி சில சம்பவங்கள் நடப்பதால் சாகப்போவது உறுதி என்று கருதும் நாயகன், தனது 30 நாளை எப்படி செலவழிக்கிறான். சாபத்தில் இருந்து அவன் மீண்டானா என்பதுதான் கதை என்றார் மனு பார்த்திபன்.