தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி |

கேரளாவில் வரலாறு காணாத பெரு மழையால் அந்த மாநிலம் பெரும் பாதிப்படைந்துள்ளது. மக்கள் வீடு, பொருள், பணம் இழந்து, உணவு பொருளுக்கு கூட போராடி வருகிறார்கள். பல மாநில மக்கள் அந்த மாநில மக்களுக்கு உதவி வருகிறார்கள். இதுவரை சுமார் 20 ஆயிரம் கோடி அளவிற்கு பாதிப்பு என்கிறார்கள். கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து தக்க உதவிகள் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
மதிப்பிற்குரிய பிரதமரே, கேரள வெள்ளப் பாதிப்பை, தேசியப் பேரிடராக உடனே அறிவிக்கும்படி வேண்டுகிறேன். மேலும், நிவாரண நிதியையும் அதிகமாக வழங்க கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நம் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் செயல்படுத்தத் தேவையான உதவிகளை வழங்குங்கள். இவ்வாறு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.