'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழ் சினிமாவில் 'சந்திரமுகி' வெளிவந்த பிறகு வருடம் தவறாமல் பேய்ப் படங்கள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதில் பல பேய்கள் பல நடிகர்கள், நடிகைகளுக்கு வெற்றி என்ற அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. அந்தப் பேய்கள்தான் அவர்களுடைய மார்க்கெட்டையும் தக்க வைத்துக் கொடுத்தது. ஆனால், சில பேய்கள் சிலரை நன்றாகவே ஏமாற்றிவிட்டது.
அதிலும், முன்னணி நடிகையான த்ரிஷா பேயிடம் ஏமாந்த அளவிற்கு வேறு யாராவது ஏமாந்து போயிருப்பார்களா என்பது தெரியவில்லை. 2016ல் த்ரிஷா நாயகியாக நடித்த 'நாயகி' படம் தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கில் அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. தமிழில் அப்படி ஒரு படம் வந்ததா என்பது கூடத் தெரியாமல் போய்விட்டது.
அது போலவே இந்த 2018ல் த்ரிஷா நாயகியாக நடித்த 'மோகினி' படம் தமிழில் தயாராகி தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. 'நாயகி' படமாவது தமிழில் டப்பிங் படம் என்பதால் பெரிய பிரச்சினையில்லை. ஆனால், த்ரிஷா தமிழில் நேரடியாக நடித்து வெளிவந்த 'மோகினி' படம் ஒரு டப்பிங் படம் போல வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் போய்விட்டது. தமிழ்ப் பேயும், தெலுங்குப் பேயும் த்ரிஷாவை நன்றாகவே ஏமாற்றிவிட்டது. இனி, யாராவது பேய் கதையுடன் த்ரிஷாவிடம் போய் கதை சொன்னால், கண்டிப்பாக பேய் ஓட்டு ஓடிவிடுவார்.