பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
ஜோதிகாவை வைத்து ராதா மோகன் இயக்கியுள்ள 'காற்றின் மொழி' அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில் '60 வயது மாநிறம்' எனப் பெயரிடப்பட்டுள்ள மற்றொரு படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்துள்ளார் ராதா மோகன்.
பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி கதாநாயகர்களாக நடிக்கும் '60 வயது மாநிறம்' படத்தில் இந்துஜா, குமாரவேல், ஷரத், மதுமிதா, ஆகியோரும் நடித்துள்ளனர். 2015ல் வெளியான ஒரு கன்னட படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணுவின் 'வி.கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.
'காற்றின் மொழி' படத்திற்கு முன்பாக '60 வயது மாநிறம்' படத்தை இயக்கி முடித்துவிட்ட ராதாமோகன், 'காற்றின் மொழி'-க்கு முன்னதாகவே '60 வயது மாநிறம்' படத்தை இம்மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
ராதாமோகனின் மற்றொரு படமான 'காற்றின் மொழி' அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. விக்ரம் பிரபு நடிப்பில் 'துப்பாக்கி முனையில்' என்ற மற்றொரு படத்தையும் 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.