மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
அபியும் நானும், மொழி, பயணம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராதா மோகன். நடிகர் எஸ். ஜே. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய பொம்மை திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதையடுத்து தற்போது ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. அந்த வகையில் இப்போது இயக்குனர் ராதா மோகன் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கிறார். இதை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.