கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு கிடைத்த ஆதரவு விஜயின் ஜனநாயகனுக்கு கிடைத்ததா? | கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: தேங்காய் சீனிவாசனிடம் எம்ஜிஆரின் கண்டிப்பும், கருணையும் | பிளாஷ்பேக்: 'பராசக்தி'யை தங்கமாக மின்ன வைத்த மதுரை தியேட்டர் | நாளை ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை! | ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் |

பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவருடைய 'கென்னடி' என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த படத்தை திரையிட்ட பிறகு நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய அனுராக் காஷ்யப், "முதலில் இந்தப்படத்தில் நடிக்க என்னுடைய மனதில் இருந்தவர் நடிகர் விக்ரம். அதற்கு காரணம் அவருடைய உண்மையான பெயர் 'கென்னடி'. ஆனால், அவரை நான் தொடர்பு கொண்டபோது என் அழைப்புக்கு அவர் எந்த பதிலும் அளிக்காததால் வேறொருவரை கதாநாயகனாக தேர்ந்தெடுத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன் என்று தெரிவித்தார்.
அனுராக் காஷ்யப் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி நெட்டிசன்கள் விக்ரமை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் இந்த விடியோவிற்கு நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
"அன்புக்குரிய அனுராக் காஷ்யப், ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த நமது உரையாடலை கூறுகிறேன். இந்த படத்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு நான் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் நண்பர் ஒருவர் மூலமாக நான் அறிந்த உடன் உங்களை தொடர்பு கொண்டு எனக்கு உங்களுடைய எந்த மெயிலும், மெசேஜூம் வரவில்லை என தெரிவித்தேன். மேலும், நீங்கள் என்னை தொடர்பு கொண்ட மெயில் ஐடி மற்றும் என் மொபைல் நம்பரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் மாற்றிவிட்டேன் என்று அப்போதே உங்களிடம் கூறினேன். நீங்கள் இயக்கியுள்ள கென்னடி படத்தை பார்க்க மிகுந்த ஆவலாக உள்ளேன். காரணம் அது என்னுடைய பெயரை கொண்டிருப்பதால். அன்புடன் கென்னடி என்ற சீயான் விக்ரம்” என்று தனது விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.