ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, ஏமாற்றி விட்டதாக திரையுலகினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் ஆரம்பித்த புயல், தற்போது தமிழ் சினிமாவில் மையம் கொண்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பிரபலங்களின் பெயரை வெளியிட்டார். இவர்களில் லாரன்ஸ், ஸ்ரீரெட்டியின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அவருக்கு நான் வாய்ப்பு தருகிறேன். நான் சொல்லும் சில நடன அசைவுகளை பத்திரிகையாளர்கள் முன்பு நடித்து காட்டினால் போதும் என்று கூறியிருந்தார்.
ஸ்ரீரெட்டியும், லாரன்ஸின் சவாலை ஏற்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ்க்கு என தலைப்பிட்டு ஒரு வீடியோவை ஸ்டைலாக போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் அஜித்தின் ஆளுமா டோலுமா, விஜய்யின் நீதானே நீதானே என்ற பாடல்களை டப் மாஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.