மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் வட சென்னை. கேரம் விளையாட்டு உடன் வட சென்னையில் நடக்கும் தாதாயிசத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
நடிகர் தனுஷூக்கு இன்று பிறந்தநாள். ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வட சென்னை படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர். இளமையான தோற்றத்தில் தனுஷ், கேரம் விளையாடுவது போன்று அரம்பிக்கும் இந்த டீஸரில் தனுஷ் தாதாவாக உருவெடுப்பது மாதிரியான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஒருத்தன் செத்தால் முடிகிற சண்டை கிடையாது, ஜெயிக்கிறமோ, தோற்கிறமோ முதலில் சண்டை செய்யனும், திருப்பி அடிக்கலன்னா இவங்க நம்மள அடிச்சு ஓட விட்டுருவானுங்க, இது நம்ம ஊரு, நம்ம தான் பாத்துக்கனும், நம்ம தான் இதுல சண்ட செய்யனும் போன்ற வசனங்கள் இடம் பெறுகின்றன.
அனேகன் பர்மா தனுஷ், ஆடுகளம், கொடி படங்களில் பார்த்த தனுஷ் என அவரின் தோற்றங்கள் மாறுபடுகின்றன. பொல்லாதவன், புதுப்பேட்டையில் கத்தியை எடுத்து சுற்றியிருப்பவர்களை வீழ்த்து போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
1.04 நிமிடம் ஓடும் இந்த டீஸரில், சமுத்திரகனி, அமீர், கிஷோர், டேனியல், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா, ராதாரவி உள்ளிட்ட முதன்மை ரோலில் நடிப்பவர்களும் இடம் பெறுகின்றனர். கூடவே இந்த டீஸரில் தனுஷ் - ஐஸ்வர்யா இடையேயான முத்தக்காட்சியும் இடம் பெற்றுள்ளது.