டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தொண்டன், கொளஞ்சி படத்திற்கு பிறகு சமுத்திரகனி ஹீரோவாக நடிக்கும் படம் பெட்டிக்கடை. லட்சுமி கிரியேஷன் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து, இயக்குகிறார். சமுத்திரகனியுடன் வீரா, சாந்தினி, சுந்தர், அஸ்மிதா, வர்ஷா, மொட்டை ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். அருள், சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்கள், மரியா மனோகர் இசை அமைக்கிறார். படம் பற்றி இசக்கி கார்வண்ணன் கூறியதாவது:
நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள். அந்த தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அந்த கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார்.
வியாபாரி வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவு சங்கிலி இருக்கும். இந்த சங்கிலியை அறுத்து, எறிந்தது கார்ப்பரேட் முதலாளிகள். சாதாரண பெட்டிக்கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை.
ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர்கேடு வருகிறது. இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவு சங்கிலி அறுபட்டது என்பதையும், கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே பெட்டிக்கடை. படப்பிடிப்பு திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. என்றார் இசக்கி கார் வண்ணன்..