மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காலா படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கலையரசன், சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார். நம்ம ஊர் நாசர் மாதிரி சகல கேரக்டரிலும் நடிக்கும் குணசித்ர நடிகர் இவர்.
இந்தப் படத்தில் சிம்ரன் ரஜினியின் முன்னாள் காதலியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும், ரஜினிக்கு உள்ளூர் வில்லனாக பாபி சிம்ஹாவும், அவரது தந்தையாக ஆடுகளம் நரேனும், மேகா ஆகாஷ் பாபி சிம்ஹா ஜோடியாகவும் நடிக்கிறார்கள். நவாசுதீன் சித்திக் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் கதை கசிந்த வகையில் இதுதான் : ரஜினி ஒரு கல்லூரி பேராசியர். பகலில் பேராசிரியர், இரவில் விடுதி வார்டன். நாட்டில் நடக்கும் சமூக விரோத செயல்களை தட்டிக் கேட்க விடுதி மாணவர்களை தயார்படுத்தும் ரஜினி, அவர்களை கொண்டு வில்லன்களின் கொட்டம் அடக்குவார். இரவிலேயே காரியத்தை முடித்தவிட்டு விடுதிக்கு வந்து விடுவார்கள். பகலில் வழக்கம்போல கல்லூரி நடக்கும், ரஜினி பாடம் நடத்துவார். யார் இப்படிச் செய்கிறார்கள் என்று போலீஸ் தவிக்கும். பிறகு நடப்பது என்ன என்பது மாதிரியான கதை.
கல்லூரி பகுதிக்கான படப்பிடிப்புகள் டார்ஜிலிங்கில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. அங்கேயே ரஜினியின் ஓப்பனிங் பாடல் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கு டான்ஸ் மாஸ்டர் ஷெரிப் நடனம் அமைக்கிறார். ரஜினியின் பிளாஷ் பேக் காட்சிகளின் களம் மதுரை. ஆனால் மதுரையில் படப்பிடிப்பு இல்லை. மதுரை நகர வீதிகள், கோவில்கள், தெருக்களை பின்னி மில்லில் செட் போட்டு படமாக்குகிறார்கள். அடுத்த மாதம் 10ந் தேதி முதல் இங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.
படத்திற்கு ரஜினி 60 நாட்களும், விஜய் சேதுபதியும், சிம்ரனும் 20 நாட்களும், நவாசுதீன் சித்திக் 10 நாட்களும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள்.