லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

நாளைய இயக்குனர் போட்டியில் டைட்டில் வென்றவர் ராசு ரஞ்சித் அவர் இயக்கி நடிக்கும் படம் தீதும் நன்றும். என்.எச்.ஹரி சில்வர் ஸ்கிரீன் சா£ர்பில் எச். சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கிறார். ராசு ரஞ்சித் தவிர சந்தீப்ராஜ், ஈசன் ஆகியோரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி ஹீரோயின், லிஜி மோல் இன்னொரு ஹீரோயின், கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், சி.சத்யா இசை அமைக்கிறார். படம் பற்றி ராசு ரஞ்சித் கூறியதாவது:
அன்றாட தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் செய்யும் செயல்களால் தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற தமிழ் பொன்மொழியில் இருந்துதான் இந்தப்படத்தின் டைட்டிலையே தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம்.
இந்தப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது. தமிழ் கலாச்சாரம் சார்ந்த படம் தான் என்றாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கும். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்