பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கம் நடிகைகளில் நயன்தாரா தான் முன்னணியில் இருக்கிறார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படத்திற்கு அவர் சுமார் 4 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.
அவருடைய கால்ஷீட் கிடைக்காதா என பல முன்னணி ஹீரோக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கான படங்களையும், கதைகளையும் தேர்வு செய்தவதில் நயன்தாரா தற்போது மிகவும் கவனமாக இருக்கிறார் என்கிறார்கள்.
நயன்தாராவிற்குப் போட்டியாக தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதைக்கு யாருமே இல்லை. அவருக்கான இடத்திற்கும், சம்பளத்திற்கும் எந்தப் போட்டியும் இல்லை. மற்ற முன்னணி நடிகைகளும் பொறாமைப்படும் அளவிற்கு நயன்தாரா தனி இடத்தில் உள்ளார்.
ஹிந்தியிலிருந்து சிலர் வந்தாலும் அவர்களால் நயன்தாராவிற்குப் போட்டியாக மாற முடியவில்லை. பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் அவருடைய அப்பாவின் வாழ்க்கை வரலாறான 'என்டிஆர்' படத்தில் நாயகியாக நடிக்க வித்யாபாலனை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அவருக்கு சம்பளமாக 2 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்தான் நாயகி என்றாலும் படத்தில் அவர் அதிக நேரம் வரமாட்டார் என்கிறார்கள். மேலும், குறைந்த நாட்களில் அவருடைய பகுதி படப்பிடிப்பை முடித்துவிடுவார்களாம். இருப்பினும் நயன்தாராவின் சம்பளத்தை விட குறைவான சம்பளத்திற்கு வித்யாபாலன் நடிக்க சம்மதித்தது ஆச்சரியமாக உள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.




