விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
நயன்தாராவின் அடுத்த வித்தியாசமான படமாக வெளியாக இருக்கிறது கோலமாவு கோகிலா. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் நயன்தாரா தான் முதன்மையானவர். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக யோகி பாபு, நயன்தாராவை ஒருதலையாய் காதலிக்கும் "கல்யாண வயசு" பாடல், யூ-டியூப்பில் 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று(ஜூலை 5) வெளியிடப்பட்டன. மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக உள்ளன.
டிரைலரில் நயன்தாரா போதை பொருள் கடத்தும் பெண்ணாக நடித்திருக்கிறார். அவருக்கு துணையாக சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிரைலர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான ஒரு மணிநேரத்தில் 1.39 லட்சம் பார்வைகள் கிடைத்தன.