விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அட்டகத்தி, பீட்சா என தொடர்ந்து வித்தியாசமான படங்களையும், வெற்றிப் படங்களையும் தயாரித்தவர் சி.வி.குமார். சில தோல்விகளையும் சந்தித்தார். 'மாயவன்' என்ற படத்தின் மூலம் இயக்குனரானார் சி.வி.குமார். அந்தப்படமும் மிகப்பெரிய தோல்விப்படமாகி அவருக்கு நஷ்டத்தைக் கொடுத்தது.
இந்நிலையில் 'மாயவன்' படத்தை தொடர்ந்து 'GANGS OF மெட்ராஸ்' என்ற படத்தை இயக்குகிறார் சி.வி.குமார். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய கேங்ஸ்டர் ரக படம். இந்தப்படத்தில் புதுமுக நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்கிறார்.
டேனியல் பாலாஜி, கலையரசன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹரி டபூசியா இசை அமைக்கிறார். சின்ன பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை மூன்றே மாதத்தில் முடித்து வெளியிட்டுவிட வேண்டும் என்ற முடிவில் உள்ளார் சி.வி.குமார்.
இந்த படத்தின் டைட்டிலை ஹாரிஸ் ஜெயராஜ் பெயரைப்போல் பாதி ஆங்கிலத்திலும் பிற்பாதியை தமிழிலும் உருவாக்கியுள்ளனர்.