விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
காலா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். டார்ஜிலிங்கில் ஒரு மாதம் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ரஜினி இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். படத்தில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது.
ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்கள்.
இந்த நிலையில், தற்போது காஜல் அகர்வால் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவியுடன் கைதி எண் 150 படத்தில் நடித்து வந்தபோதே, ரஜினியுடன் ஒரே படத்திலாவது நடிக்க வேண்டு என்பது தனது கனவாக இருப்பதாக கூறி வந்த காஜல் அகர்வாலுக்கு இப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.