ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
பா.ஜ.,வின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அக்கட்சி தலைவர்கள் எல்லா துறையிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களை சந்தித்து சாதனை விளக்க அறிக்கை அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், நடிகை வரலட்சுமியை சந்தித்து சாதனை அறிக்கையை வழங்கினார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாக, வரலட்சுமி பா.ஜ.வில் இணைந்துவிட்டதாக செய்தி பரவியது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வரலட்சுமி, டுவிட்டரில், "பா.ஜ., கட்சி நாட்டில் செய்யும் மாற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட சில விஷயங்களை முரளிதரராவ் உடனான சந்திப்பின் போது பேசினேன். எங்களின் கருத்துக்களை மோடி கேட்க ஆர்வமாய் இருப்பது மகிழ்ச்சி. பா.ஜ.வில் நான் இணைந்ததாக வந்த செய்தி முற்றிலும் தவறானது, நான் எந்த கட்சியிலும் இல்லை என கூறியுள்ளார்.