இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் படங்களில் நடித்தவர் கெளதம் கார்த்திக். இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சொன்னபோது அவர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து கெளதம் கார்த்திக் கூறுகையில், ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடிக்கும்போது எனது இமேஜ் போய் விடும் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் இந்த படங்கள் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. இளவட்ட ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள்.
அதோடு, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை பார்க்க ஆண்களைப்போன்று பெண்களும் தியேட்டருக்கு வந்தார்கள். இதை நானே பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அதனால், இப்போதைக்கு உடனடியாக அடல்ட் ஒன்லி படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றாலும், ஒரு சிறிய இடைவெளி கொடுத்து மீண்டும் நடிப்பேன் என்கிறார் கெளதம் கார்த்திக்.