மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜீத்குமார் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு யூனிட் சென்னை திரும்பி விட்டது.
ஆனால் இதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அடுத்தபடியாக மும்பைக்கு செல்கிறார்களாம். அங்கு இரண்டாம்கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு மூன்றாம்கட்ட படப்பிடிப்பைதான் சென்னையில் நடத்துகிறார்களாம்.
மேலும், தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வந்து விடவேண்டும் என்ற வேகத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதால், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும்போதே இறுதிகட்ட பணிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.