மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில், உருவாகிவரும் படம் 'என்.ஜி.கே'. தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் பைனான்ஸ் செய்துள்ளது.
இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் எடிட்டராக பிரசன்னா ஜி.கே. ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். என்ன காரணத்தினாலோ, தற்போது திடீரென எடிட்டர் மாற்றப்பட்டுள்ளார்.
பிரசன்னாவுக்குப் பதிலாக பிரவீன் கே.எல். எடிட்டராக நியமிக்கப்பட்டுள்ளார். எடிட்டர் மாற்றப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. என்றாலும் செல்வராகவனுக்கும் எடிட்டருக்கும் ஏற்பட்ட தகராறே இந்த மாற்றலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.