'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். அதைத் தக்க வைக்க சிலர் தவறி விடுகின்றனர். அப்படி ஒரு நிலைமையில்தான் சந்தானம் இருக்கிறார். டிவியில் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர் சினிமாவிற்குள்ளும் நுழைந்து நகைச்சுவை நடிகராக பலத்த வரவேற்பைப் பெற்றார். ஆனால், அவருடனேயே டிவியில் பயணித்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றி பெற்றதும் சந்தானத்திற்கும் அந்த ஆசை வந்தது. நகைச்சுவை நடிகராக நடிப்பதை விட்டுவிட்டு நாயகனாக நடிக்க ஆசைப்பட்டார்.
இதுவரை அவர் நாயகனாக நடித்த படங்களில் 'தில்லுக்கு துட்டு' படம் மட்டும்தான் ஓடியது. எப்போதே எடுத்து முடிக்கப்பட்ட 'சர்வர் சுந்தரம்' பல வெளியீட்டுத் தேதிகளை அறிவித்து, பிறகு தள்ளிப் போய் கடைசியாக இப்போது ஜுலை 6ம் தேதியன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். அன்றாவது படம் வருமா, அல்லது தள்ளிப் போகுமா என்பது அப்போதுதான் தெரியும்.
இதனிடையே, சந்தானம் நாயகனாக நடிக்க ஆரம்பித்த 'ஓடி ஓடி உழைக்கணும்' படமும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் இப்படம் 2016ம் ஆண்டில் ஆரம்பமானது. சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு பின்னர் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது.
சந்தானம் நடித்து கடைசியாக வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படம் தோல்வியடைந்த்தால் சந்தானத்திற்கு இருக்கும் வியாபாரமும் போய்விட்டது. தற்போது எந்த புதிய படங்களிலும் நடிக்காமல் வீட்டிலேயே கிடக்கிறாராம். மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்க வந்தால் வருமானமும் வரும், பழைய பெயரும் வரும், ஆனால் அவர் வருவாரா ? என கோலிவுட்டிலேயே கேட்டு அவரை அணுகாமல் இருக்கிறார்களாம்.