Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காவிரிக்காக சென்னையில் ஆலோசனை கூட்டம் : கமல்

14 மே, 2018 - 15:56 IST
எழுத்தின் அளவு:
Kamal-arrange-meeting-for-Cauvery

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமல், காவிரி விவகாரத்தில் மே.19 ஆம் தேதி சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இதில் கட்சிகளை கடந்தும், இளைஞர்கள், ஆர்வலர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். காவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம். காவிரி பிரச்னை மக்களின் பிரச்னை என்பதால் கட்சிகளை தாண்டி ஒன்றாக நிற்க வேண்டும்.

காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் யார் முதல்வராக வந்தாலும் அவரை சந்தித்து பேச உள்ளோம். தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை அவசியம். காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும் என்றார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
கிளாமருக்கு தயாராகிறார் ஸ்ரீதிவ்யாகிளாமருக்கு தயாராகிறார் ஸ்ரீதிவ்யா மிரட்டிய சாவித்ரி, நிறுத்தப்பட்ட 'என்டிஆர்' ? மிரட்டிய சாவித்ரி, நிறுத்தப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

vira - tamil naadu,இந்தியா
15 மே, 2018 - 13:39 Report Abuse
vira அனைத்து மாநிலங்களும் ஒன்று சேர வேண்டும். பொய் அரசியலும் நடிகர்களும் அப்பத்தான் காலி ஆவார்கள். வாழ்க இந்தியா வளர்க நம் முன்னேற்றம்.
Rate this:
"????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா
15 மே, 2018 - 12:05 Report Abuse
அடேய், குறுக்க மறுக்க ஓடாதன்னு எத்தனை முறை உனக்கு சொல்லுறது?
Rate this:
spr - chennai,இந்தியா
15 மே, 2018 - 07:09 Report Abuse
spr கமல் போராட எவ்வளவோ இந்த மாநிலத்திற்குள்ளே இருக்கிறது இதே தினமலர் செய்தித்தாளில் நிலத்தடி நீரைச் சேமிக்க வழிவகைகள் சொல்லிய ஒரு கட்டுரை வெளியாயிற்று அது நம்மால் முடிகிற முயற்சி அடுத்த மழை வருவதற்குள் (வரும். இயற்கை என்றுமே பொய்த்ததில்லை) முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும் அதனைவிடுத்து உட்கார்ந்து பேசிப் பேசி மக்களை உசுப்பேற்றுவதால் பலனில்லை ஒரு தலைவன் எந்தவொரு பிரச்சினைக்கும் இதுதேர்வு என்று சொன்னபிறகே பிறரிடம் அபிப்பிராயம் கேட்டாக வேண்டும் எல்லோரும் அவல் கொண்டுவாருங்கள் நான் உமி கொண்டுவருகிறேன் ஊதி ஊதித்த தின்போம் என்று சொல்லக்கூடாது பேச்சுக்கு இனி காலமில்லை கோடை மழை வருவதற்குள் செயலாக்கம் வேண்டும்
Rate this:
ashokperumal - puducherry,இந்தியா
15 மே, 2018 - 06:16 Report Abuse
ashokperumal இது சினிமா செய்தியா,
Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14 மே, 2018 - 19:18 Report Abuse
Vijay D Ratnam காவிரி விவகாரத்தில் 44 வருடங்களாக அரசியல்வியாதிகள் பேசி பேசி இதுவரை என்ன சாதித்தார்கள், ஒன்றும் இல்லை. நாட்டின் உயர்ந்த அமைப்பான உச்ச நீதிமன்ற உத்திரவை மதிக்காத கர்நாடக முதல்வர்கள் பேசினால் தண்ணீர் திறந்து விடுவார்களா? ஒவ்வொரு முறையும் சிறப்பு நீதிமன்றம், நடுவர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என சட்டப்போராட்டத்தின் மூலம் நீதிமன்றங்களின் மூலம் தான் தமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்பட்டது. காவிரியில் கர்நாடகா அவர்கள் தேவைக்கு அணைகள் கட்டிக்கொள்ளலாம் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று சொன்னவர் கருணாநிதி, நடுவர் மன்ற தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிடாமல் ஏழரை ஆண்டுகள் இழுத்தடித்தது திமுக காங்கிரஸ் கூட்டணி, ஆனால் காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவின் பங்கு மகத்தானது. ஒவ்வொரு முறையும் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறது.இந்த நேரத்தில் உங்கள் அரசியலுக்கு தேவையில்லாமல் காவிரி விவகாரத்தை போட்டு குழப்பாதீர்கள். கமல் அவர்களே, உங்கள் அரசியல் பிழைப்புக்கு எவ்வளவோ விஷயம் இருக்குது. உதாரணத்துக்கு மக்களை திரட்டி தமிழக நிலத்தடி நீரை உறிஞ்சும், நீரை மாசுபடுத்தும் வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு, கார் தொழிற்சாலைகளுக்கு, தோல்தொழிற்சாலைகளுக்கு எதிராக போராட்ட தயாரா?
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in