தணிக்கையில் ‛யு' சான்றிதழ் பெற்ற ‛வித் லவ்' | பழைய காதல் பிரேக்கப் குறித்து பேசிய மிருணாள் தாக்கூர் | 2வது சிம்பொனி: அப்டேட் கொடுத்த இளையராஜா | அஜித்தின் 64வது படத்தை தயாரிக்கும் ஏகே நிறுவனம் | ஜனநாயகனைத் தொடர்ந்து அடுத்த பட வேலைகளில் இறங்கிய வினோத் | இது புதிய இந்தியா : துரந்தர் 2 படத்தின் டீசர் வெளியானது | மீண்டும் ஒரு போராளி கதாபாத்திரத்தில் அதர்வா | மழை மனிதன் ஆக மாறினேன் ; 'துரந்தர்' சுவாரஸ்யம் பகிர்ந்த மாதவன் | திருப்தியுடன் வெளியே வருவீர்கள் : ரஜினி ரசிகர்களுக்கு சிபி சக்கரவர்த்தி வாக்குறுதி | ராமுக்கு என்னதான் ஆச்சு? நம்பிக்கையுடன் பேசிய ஜீத்து ஜோசப் |

மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெற்றி பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படம், தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் உருவாகி உள்ளது. அரவிந்த்சாமி, அமலாபால், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்திக் இயக்கி உள்ளார்.
இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி மாதங்கள் பல கடந்துவிட்டன. ஏற்னவே நான்கு முறை தள்ளிப்போன இப்படம் இன்று(மே 11) ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கடைசிநேரத்தில் நேற்று இரவு படம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து படத்தின் ஹீரோவான அரவிந்த்சாமி தன் வருத்தத்தை கோபமாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், பாஸ்கர் தி ராஸ்கல் படம் மீண்டும் ஒரு முறை தள்ளிப்போய் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறேன். முன்பதிவு செய்த பின்னர் படம் தள்ளிப்போய் இருப்பது எதனால் என்று தெரியவில்லை, என்னால் வருத்தத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிகிறது.
பட ரிலீஸ்க்கு தயாரிப்பாளருக்கு நான் உறுதுணையாகவே இருந்துள்ளேன். இனி படத்துக்காக எந்த வேலையும் செய்யப் போவதில்லை, புது ரிலீஸ் தேதியை டுவீட் செய்ய மாட்டேன். படம் எப்போது ரிலீஸானாலும் நிச்சயம் ரசிகர்களை கவரும். உங்களைப் போன்று நானும், இப்படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். இன்று ரிலீஸாகும் மற்ற படங்களுக்கு வாழ்த்துக்கள் என்று பதவிட்டிருக்கிறார்.