மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் தெலுங்கில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பிரகாஷ்ராஜுக்கு என தனி மவுசு இருக்கவே செய்கிறது. நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் இந்திப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த வருடம் வெளியான 'கோல்மால் அகைன்' படத்திற்கு பிரகாஷ்ராஜுக்கு பாலிவுட்டில் எந்த வாய்ப்பும் தேடிவரவில்லை. அதற்கு காரணத்தையும் பிரகாஷ்ராஜே கூறியுள்ளார்..
அதாவது பிரபல பத்திரிகையாளரும் பிரகாஷ்ராஜின் தோழியுமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார் அல்லவா..? அந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் மெத்தனம் காட்டுவதாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார் பிரகாஷ்ராஜ். மேலும் அவ்வப்போது தொடர்ந்து பிஜேபியை அவர் விமர்சித்து வருகிறார். எப்போது பிஜேபியை விமர்சிக்க ஆரம்பித்தேனோ அப்போதிருந்தே பாலிவுட்டை சேர்ந்தவர்கள் எனக்கு வாய்ப்பு தருவதை நிறுத்திவிட்டார்கள் என பிரகாஷ்ராஜே கூறியுள்ளார்.