ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
தமிழ்த் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். விஜய், அஜித் போன்றவர்களே அதிகமான சம்பளம் கேட்கும் போது ரஜினிகாந்த் அதிக சம்பளம் கேட்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
'கபாலி' படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற சம்பளம் 40 கோடி என்கிறார்கள். அதே சமயம் '2.0' படத்திற்கான சம்பளம் என்ன என்பது மட்டும் வெளியில் வரவில்லை. அந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் நிறைய கஷ்டப்பட வேண்டியிருந்ததால் சம்பளத்தையும் மீறி அந்தப் படத்தில் வேறு வகையில் அவருக்கு வருமானம் தரும் விஷயத்தை செய்திருப்பார்கள் என்கிறார்கள்.
'காலா' படத்திற்கும் ரஜினிகாந்த் என்ன சம்பளம் வாங்கியுள்ளார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. மருமகன் தனுஷ் தயாரிப்பில் நடித்திருந்தாலும் அதில் ரஜினிகாந்தின் சம்பளம் அவர் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட குறைவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். படத்தின் மொத்த பட்ஜெட்டே 75 கோடிதான். ஆனால், இதுவரையில் அந்தப் படத்திற்கான வருவாய் 200 கோடியைத் தொட்டுவிட்டதாக தகவல் உருவாகியுள்ளது. மகள் ஐஸ்வர்யாவுக்காகவும், மருமகன் தனுஷுக்காகவும் ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்த படம் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்திற்கு அவருடைய சம்பளம் 65 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான பட்ஜெட் 120 கோடியைத் தொடும் என்கிறார்கள். 'கபாலி, காலா, 2.0' ஆகிய படங்களின் வியாபாரத்தைப் பற்றி தெரிந்து கொண்டே ரஜினி அவ்வளவு சம்பளம் கேட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.