'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. பைனான்ஸ் பிரச்சனையினால் பல மாதங்களாக முடங்கிக் கிடக்கும் இந்தப்படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள். துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் மோதும் வில்லன் யார் என்பது குறித்த தகவல் இதுநாள்வரை சஸ்பென்ஸாக இருந்தது. தற்போது வெளியாகியுள்ளது.
'களி', 'கம்மட்டி பாடம்' உள்ளிட்ட பல்வேறு மலையாளப் படங்களில் நடித்த விநாயகன், துருவ நட்சத்திரம் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர் தமிழுக்கு புதுசு அல்ல. விஷாலின் 'திமிரு', சிம்புவின் சிலம்பாட்டம் மற்றும் தனுஷின் 'மரியான்' படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார் விநாயகன்.