விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
ஹரி - விக்ரம் கூட்டணியில் 2003-ம் ஆண்டு வெளியாக வெற்றி பெற்ற படம் சாமி. தற்போது இதன் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது.
விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். இந்தப்படத்தில் கமிஷனராக நடிக்கிறார் விக்ரம். அப்பா - மகன் என இரண்டு ரோலில் நடிப்பதாக தெரிகிறது. முதலில் நடிக்க ஓகே சொல்லி பின்னர் விலகிய த்ரிஷா, இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
தற்போது சாமி 2 படத்தின் ஸ்டில்கள் வெளியாகி உள்ளன. இதில் விக்ரம் போலீஸ் ரோலில் மிகவும் ஸ்டைலாக மிடுக்காக காணப்படுகிறார். சமூக வலைதளங்களில் வைராகி உள்ள சாமி 2 ஸ்டில்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.