மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கதைக்கு அவசியப்பட்டால் நிர்வாணமாககூட நடிப் பேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஆண்ட்ரியா. அந்த வகையில், இமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்காத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தில் முதன்முறையாக வடசென்னை ஸ்லம் ஏரியா பெண்ணாக சேலை காஸ்டியூமில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு இந்த படத்தில் வடசென்னை தமிழிலும் டப்பிங் பேச பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா.
மேலும், இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நடிகைகள் இருக்க, கதைப்படி யார் தனுசுக்கு ஜோடி என்கிற சந்தேகங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஆண்ட்ரியா டைரக்டர் அமீருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த படத்தில் தாதா வேடத்தில் அமீர் நடித்துள்ளார். அவரது சிஷ்யர்தான் தனுஷ். அமீருக்குப்பிறகு அவர் எப்படி முக்கிய தாதாவாக உருவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அந்த வகையில், சீனியர் தாதா அமீரின் மனைவியாக மிகக்கச்சிதமாக நடித்திருக்கிறாராம் ஆண்ட்ரியா. வடசென்னை வெளியாகும்போது ஆண்ட்ரியாவின் நடிப்பு பேசப்படுமாம்.