2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் பிறந்து வளர்ந்த விஜய், முன்னணி ஹீரோவான பிறகு தன்னுடைய வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு விட்டுவிட்டு அடையாறுக்கு வீட்டை மாற்றினார்.
அதன் பிறகு அடையாறு வீட்டிலிருந்து தன் மனைவி மக்களோடு நீலாங்கரை வீட்டிற்கு குடிபோனார். அடையாறு வீட்டில் விஜய்யின் அப்பா அம்மா தற்போது குடியிருந்து வருகின்றனர். தற்போது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூர் என்ற ஏரியாவுக்கு வீட்டை மாற்றியிருக்கிறார் விஜய்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் தான் கடந்த சில வருடங்களாகக் குடியிருந்தார் விஜய். அந்த வீட்டை இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் இன்னும் கொஞ்சம் பெரிதாக கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம் அவருடைய குடும்பத்தினர். எனவே, பனையூரில் உள்ள வீட்டுக்குத் தற்போது மாறியிருக்கிறார் விஜய்.