மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
லோகேஷ் குமார் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் என் மகன் மகிழ்வன். அனுபமா குமார், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற இப்படத்திற்கு சமீபத்தில் ஐதராபாத் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்தது.
ஓரின ஈர்ப்பாளராக இருக்கும் தன் மகனின் நிலையை புரிந்த ஒரு தாயின் மன நிலை தான் இந்த படம். அம்மாவாக அனுபமா குமார் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடித்ததை பற்றி அவர் கூறும் போது,
பெண்ணாக இருந்தாலும் பையனாக இருந்தாலும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் பெற்றோர்களின் கனவும் இந்த சமூகத்தில் மிகப்பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.. குழந்தைகள் மன நிலை அறிந்து பெற்றோர்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது அவசியம் கூட. இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று சொல்லும் அனுபமா, தற்போது ராஜா ரங்குஸ்கி, வெண்ணிலா கபடி குழு 2 மற்றும் பெயரிடப்படாத 1 படத்தில் நடித்து வருகிறார்.