முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
துப்பறிவாளன் படத்தை தொடர்ந்து விஷால் நடித்து முடித்துள்ள படம் இரும்புத்திரை. விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார்.
விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் இப்படத்தின் சென்சார் கடந்த மாதமே முடிவடைந்தது. துப்றிவாளன் படத்தை இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார் விஷால்.
தமிழ் சினிமாத்துறையில் தற்போது நடந்து வரும் ஸ்டிரைக் இன்னும் முடிவுக்கு வராததினால் இரும்புத்திரை படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். மே அல்லது ஜூன் மாதம் வெளியிட விஷால் முடிவு செய்திருப்பதாக தகவல்.
சென்சார் முடிந்து ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸுக்கு காத்திருப்பதால் அந்தப் படங்களுக்கு வழிவிடுவதற்காகவே இரும்புத்திரை ரிலீஸ் தேதியை விஷால் தள்ளி வைத்ததாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.