விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் வர்மா. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளத்திலுள்ள காட்மண்டுவில் நடைபெற்றது.
இப்படத்திற்காக பல மாதங்களாக தன்னை முழுமையாக தயார்படுத்தி வந்த துருவ் விக்ரம், தற்போது தாடி, மீசை, ஹேர்ஸ்டைல் என பாலாவின் கைவண்ணத்தினால் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்.
இந்த படத்தில் துருவ் விக்ரம் தவிர மற்ற நடிகர் - நடிகைகள் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு கதாநாயகி இல்லாமல் தான் நடைபெற்றது.
தற்போது வர்மா படத்தில் நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் துருவ் விக்ரமுடன் அவரும் இணைந்து நடிப்பார் என்று தெரிகிறது.
கவுதமியின் மகள் சுப்புலட்சுமி இந்த படத்தில் ஒப்பந்தமாகிவிட்ட செய்தியை இன்னும் அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.