ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் பாலிவுட் நடிகை அதா ஷர்மா. 2008ல் விக்ரம்பட் இயக்கிய 1920 என்ற படத்தில் அறிமுகமான இவர், சில ஹிந்திப் படங்களில் நடித்தநிலையில், பூரி ஜகன்னாத் இயக்கத்தில், ஹார்ட் அட்டாக் என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.
பின்னர் 'கஷாணம்' என்ற படத்தின் மூலம் பெரும் புகழ்பெற்ற இவர், இப்போது பிரபுதேவா நடித்து வரும் 'சார்லி சாப்ளின்-2' படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்து வருகிறார். ஷக்தி சிதம்பரம் இயக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நிக்கி கல்ராணியும் நடிக்கிறார்.
அதா ஷர்மா நன்றாக பாடக் கூடியவர் என்பதை தெரிந்து கொண்ட இயக்குனர் ஷக்தி சிதம்பரம், இந்த படத்திற்காக அதா ஷர்மாவை வைத்து ஒரு 'பெப்பி சாங்'கை பாட வைத்துள்ளார்.
அம்ரேஷ் இசை அமைப்பில் அதா ஷர்மா பாடியுள்ள இந்த பாடல் 'சார்லி சாப்ளின்-2'வில் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் அம்ரேஷ். நான் இதுவரை பாடவைத்த பாடகிகளிலேயே அதா ஷர்மாவின் குரல் தான் பெஸ்ட் என்கிறார்.