மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'THE KING OF TRAVANCORE' (அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா) என்ற சரித்திர கதையில் மார்த்தாண்ட வர்மா ராஜாவாக நடிக்கிறார் 'பாகுபலி' ராணா. பிரபல மலையாள இயக்குனரும், தமிழில் 'மௌனம் சம்மதம்' படத்தை இயக்கியவருமான கே.மது இந்தப் படத்தை இயக்குகிறார்.
மிகப் பெரிய பட்ஜெட்டில் வடசென்னை படத்தைப் போலவே இரண்டு பாகங்களாக மலையாளம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் மற்றும் இந்திய சினிமாவிலுள்ள பிரபல திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் வேலைகளை 'அவதார்' மற்றும் ஜாக்கிச்சான் நடித்த சில படங்களில் விஷுவல் எபெக்டஸ் நிபுணராக பணிபுரிந்த சக் கோமிஸ்கி கவனிக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே ஷாருக்கான் நடித்த 'டான்-2' படத்தின் ஒரு சில காட்சிகளுக்காக பணியாற்றியுள்ளார்.
இந்திய திரைப்படத்தில் முழுமையாய் இவர் பணியாற்றவிருப்பது இந்த படத்திற்குத்தான். 'பாகுபலி'க்கு இசை அமைத்த கீரவாணி இப்படத்துக்கு இசை அமைக்கிறார். ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவை கவனிக்கிறார். நம்ம ஊர் மதி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.