மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இன்றைக்கு சமூக வலைதளங்கள் உலகையே ஆட்டுவிக்கின்றன. அரசியல் தொடங்கி சினிமா வரை எல்லாமே பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டிராகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தான் வைரலாகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2014-ம் ஆண்டு டுவிட்டர் தளத்திற்கு வந்தார். இவரை 4.58 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். ஆரம்பத்தில் அவ்வளவாக டுவிட்டரில் ஆர்வம் காட்டாத ரஜினி, தன் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்புக்கு பின்னர் கொஞ்சம் ஈடுபாடு காட்ட துவங்கி உள்ளார்.
இந்நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டிராகிராமிலும் ரஜினி இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ பக்கங்கள் துவங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் முதல் பதிவாக வணக்கம் என பதிவிட்டுள்ளார். ரஜினியை 1.50 லட்சம் பேர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.
அதேப்போன்று இன்ஸ்டிராகிராமில் வணக்கம், வந்துட்டேன்னு சொல்லு என்று தன்னுடைய முதல் பதிவை இட்டுள்ளார். தற்போது வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.
அரசியல் களத்தில் இறங்கியுள்ள ரஜினி, இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் வகையில் பேஸ்புக், இன்ஸ்டிராகிராமில் இணைந்திருப்பதாக தெரிகிறது.
ரஜினியின் பேஸ்புக் தளம் லிங்க் : https://www.facebook.com/Rajinikanth/
ரஜினியின் இன்ஸ்டிராகிராம் தளம் லிங்க் : https://www.instagram.com/rajinikanth/