மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தில் நடித்து பிரபலமானவர் ரம்யா நம்பீசன். ஆனபோதும், அதன்பிறகு அவருக்கு அதிகப்படியான படங்கள் புக்காகவில்லை. இன்னும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. பிரபலமில்லாத நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதோடு, தற்போது சீரியல் நடிகர் கவினுக்கு ஜோடியாக நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி ரம்யா நம்பீசன் கூறுகையில், தமிழில், விஜய் சேதுபதியுடன் பீட்சா, சேதுபதி ஆகிய படங்களில் நடித்துள்ளேன். இந்த இரண்டு படங்களுமே எனக்கு ஹிட் தான். என்றாலும், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் கிடைக்கவில்லை. நானும் அதற்காக முயற்சி எடுக்கவில்லை. காரணம், நான் எப்போதும் கதைக்கும், என்னுடைய கதாபாத்திரத்திற்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். அந்த வகையில் எனக்கு திருப்திகரமான வேடங்கள் கிடைத்தால் ஹீரோ புதுமுகமாக இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை.
அப்படித்தான் சீரியல் நடிகர் கவினுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளேன். மலையாளத்திலும் இந்த மாதிரி அறிமுக நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் அந்த படங்களில் கதையில் எனக்கு முக்கியத்துவம் இருக்கும். அப்படித்தான் தமிழில் நான் நடித்துள்ள நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்திலும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. ஆக, சிறிய நடிகருடன் நடித்தபோதும் பெரிய கேரக்டர்களில் நடிக்கிற திருப்தி இந்த மாதிரி படங்களில் கிடைக்கிறது என்கிறார் ரம்யா நம்பீசன்.