ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
சமீபகாலமாக தனது ஹேர்ஸ்டைல், மீசை, தாடி என ஒவ்வொன்றிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் விஜய். முன்பெல்லாம் படம் முழுக்க ஒரு கெட்டப்பில் வந்தாலும் பாடல் காட்சிகளில் ஏதேனும் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தோன்றுவார். ஆனால் இப்போது ஒரே வேடத்தில் நடித்தாலும் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றி அசத்துகிறார்.
அந்த வகையில், மெர்சல் படத்தில் மூன்றுவிதமான வேடங்களில் நடித்தவர், தளபதி வேடத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு நடித்தது பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. அதனால் அந்த படத்தில் தனக்கு ஹேர்ஸ்டைல் செய்த தேவ் என்பவரையே இப்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளார் விஜய்.
குறிப்பாக, மெர்சல் படத்தில் இருந்து இந்த புதிய படத்தில் தனது தோற்றத்தை வித்தியாசப்படுத்தி காண்பிக்க வேண்டும் என்பதற்காக பல ஹேர்ஸ்டைல்களில் போட்டோ சூட் நடத்தி அதில் ஒன்றை ஓகே செய்து நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அந்த வகையில், இந்த
படத்தில் விஜய்யின் ஹேர்ஸ்டைல், மீசை இரண்டுமே புதுமையாக உள்ளதாம். ஆனால் அதை இப்போதே வெளிப்படுத்தி விட்டால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் போய்விடும் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் யாரும் மொபைல்போனில் தன்னை படம் பிடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டுள்ளாராம் விஜய்.