Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்

17 பிப், 2018 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Rakul-Preet-Singh-to-pair-with-Sivakarthikeyan

மெரீனா, மனம் கொத்திப்பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரை இரண்டாம் நிலை கதாநாயகிகளுடன் நடித்த சிவகார்த்திகேயன், தன்னை ஸ்டாராக உயர்த்திக் கொள்ளும் திட்டத்தில், அதன் பிறகு ஹன்சிகா, நயன்தாரா, என்று முன்னணி நடிகைகளை தனக்கு ஜோடியாக்கிக் கொள்ள ஆரம்பித்தார்.

அதுவே அவரை முன்னணி ஹீரோ இடத்துக்கு அழைத்து வந்தது. இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்கள் கதாநாயகிகளாக நடித்தனர். இப்போது ரகுல் ப்ரீத் சிங்கும் சிவகார்த்திகேயனுடன் இணையவிருக்கிறார்.

பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திக்யேன் அடுத்து 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கும் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தையும் தன்னுடைய நண்பர் ஆர்.டி.ராஜாவின் 24AM STUDIOS நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

'சீமராஜா'வின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரகுல் ப்ரீத்சிங்குக்கு கணிசமான சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்த ரகுல் ப்ரீத்சிங் இப்போது சூர்யாவுடன், செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in