மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் நடித்துள்ள படம் 2.ஓ. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் 2018 ஜனவரி இறுதியில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. பின்னர், ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றனர். ஆனால் இப்போது ஏப்ரலில் ரிலீஸ் இல்லை என்று கூறிவிட்டனர். அதனால் 2.ஓ படத்தினால் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருந்த ரஜினியின் காலா ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காலா ரிலீசாகயிருந்த ஜூன் மாதம் 2.ஓ திரைக்கு வரலாம் என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது கிடைத்த தகவல்படி, 2.ஓ படத்தின் விஎப்எக்ஸ் பணிகளுக்காக அதிகப்படியான செலவு செய்து வரும் லைகா நிறுவனத்திற்கு வரவேண்டிய பைனான்ஸ் தற்போது தாமதமாகிறதாம். அதனால், விஎப்எக்ஸ் பணிகள் தற்போது நிறுத்தி வைக் கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதனால் ரஜினியின் 2.ஓ படம் 2018ல் வெளிவர வாய்ப்பில்லை, 2019ல்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.