மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
2013ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஹாலிவுட் படம் பசிபிக் ரிம். தற்போது இதன் இரண்டாம் பாகம் பசிபிக் ரிம் : அப்ரைசிங் என்ற பெயரில் தயாராகி உள்ளது. முதல் பாகத்தை தயாரித்து இயக்கிய ஸ்டீவன் எஸ்.டெக்நைட் இரண்டாம் பாகத்தையும், இயக்கி உள்ளார். ஜான் பொஹையா, ஸ்கார் ஈஸ்ட்வுட், கேய்லி ஸ்பானி, சார்லி டே, பும் கோமென் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். லோம் பல்பி இசை அமைத்துள்ளார், டான் மிண்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார். லெகன்சி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் ஆழத்திலிருந்து வரும் கடல் அரக்கர்கள் நிலப் பகுதியில் வாழும் மக்களை அழிப்பார்கள். அவர்களை விஞ்ஞானிகள் உருவாக்கும் ராட்சத எந்திர மனிதர்கள் எதிர்த்து போர் புரிவார்கள். முதல் பாகத்தில் கடல் அரக்கர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடுவார்கள். இரண்டாம் பாகத்தில் அவர்கள் மீண்டும் புதிய சக்தியோடு வருகிறார்கள். மனிதர்கள் இன்னும் சக்தி வாய்ந்த எந்திர மனிதர்களை கொண்டு அதனை எதிர்கொள்கிறார்கள்.
இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 23ந் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 3டி மற்றும் 3டி ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. தமிழில் துரோகம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.