ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
இசையமைப்பாளர் - இயக்குனர் என்ற கூட்டணி மிக முக்கியமான கூட்டணி. பாரதிராஜா - இளையராஜா, மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் என இயக்குனரும், இசையமைப்பாளரும் இணைந்த சில கூட்டணிகள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பத்து வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு கூட்டணி இளம் ரசிகர்களை அவர்களது கூட்டணியால் வெளிவந்த பாடல்களில் கட்டிப் போட்டது. அந்தக் கூட்டணி செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி.
திடீரென பிரிந்த அந்தக் கூட்டணி மீண்டும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மூலம் மீண்டும் இணைந்தது. ஆனால், அந்தப் படம்தான் எப்போது வெளிவரும் என்று தெரியாமலேயே தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து அந்தக் கூட்டணி சூர்யாவின் 36வது படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்காக மூன்று நாட்கள் தொடர்ந்து கம்போசிங் செய்து ஒரு அருமையான பாடலை கம்போஸ் செய்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
அது பற்றி மேலும் கூறும் போது, “மூன்று நாட்கள் கடுமையாக கம்போசிங் செய்து கடைசியாக ஒரு அற்புதமான டிராக் செல்வராகவன் படத்திற்காகக் கிடைத்தது... கோல்டன் நாட்கள் திரும்பியது... நீங்கள் மாறவேயில்லை..” என யுவன் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள செல்வராவன், “நீங்கள் மேஸ்ட்ரோ இல்லை, உங்களுடன் இணைந்து நம்முடைய மேஜிக்கை உருவாக்குவது எப்போதுமே ஆனந்தமானது,” எனக் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கும் சூர்யாவின் 36வது படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.