மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர் ராஜூ முருகன். அவர் இயக்கிய குக்கூ, மற்றும் ஜோக்கர் படங்கள் இந்திய அளவில் கவனம் பெற்றன. ஜோக்கர் படம் தேசிய விருதும் பெற்றது. ஜோக்கர் படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டிருந்த ராஜூ ருகன் தற்போது இயக்க இருக்கும் படம் ஜிப்ஸி.
இந்தப்படம் இந்தியா முழுவதும் பயணிக்கிற ஒரு பயணக்கதை. இந்தப்படத்தின் கதையை எழுதுவதற்கு ராஜூ முருகன் இந்தியா முழுவதும் காரிலேயே பயணம் செய்தார். அப்போது படப்பிடிப்புக்கான இடங்களையும் பார்த்து வந்து விட்டார். தற்போது இந்தப் படத்தில் நடிக்க ஜீவா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தேசிங்கு ராஜா, மனம்கொத்தி பறவை படங்களை தயாரித்த ஓலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத்குமார் தயாரிக்கிறார். குக்கூ, ஜோக்கர் படங்களை போன்றே இதுவும் நல்ல கருத்துக்கள் நிறைந்த சமூக விழிப்புணர்வு படம் தான். என்றாலும் இதனை இன்னும் கூடுதலான கமர்ஷியல் அம்சங்களுடன் படமாக்க இருக்கிறார் ராஜூ முருகன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.