'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர் பார்த்திபன் மகள் கீர்த்தனா. பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும், இயக்குனராகும் லட்சியத்துடன், மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஒரு சினிமா இயக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.
இந்நிலையில், கீர்த்தனாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய்யை மணக்கிறார். இருவருக்கும் இரு வீட்டார் சார்பில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதம் 8ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலையில் திருமணமும், மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.