மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிச்சைக்காரன் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த விஜய் ஆண்டனியின் சைத்தான், எமன், அண்ணாத்துரை படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் அடுத்து அவர் நடித்து வரும் காளி படத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தை கிருத்திகா உதயநிதி, இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனி பிலிம் பேக்டரி சார்பில் பாத்திமாக விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். அவருடன் ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதனராவ், ஜெயபிரகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார்.
அண்ணாத்துரை படப்பிடிப்பில் இருக்கும்போதே காளி படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக படத்தின் புரமோசன் பாடல் ஒன்றை முதலில் வெளியிட இருக்கிறார்கள். வருகிற 24ந் தேதி வெளிவரும் இந்தப் பாடல், காளி யார் என்பதை சொல்லும் என்கிறார்கள். படத்தின் போஸ்டர்களும், விஜய் ஆண்டனியின் லுக்கும் முந்தைய படங்கள் போன்றே இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.