முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
இயக்குனர் முத்தையா, இதுவரை சசிகுமார் நடித்த குட்டிப்புலி, கார்த்தி நடித்த கொம்பன், விஷால் நடித்த மருது படங்களை இயக்கி உள்ளார். இந்த படங்களில் அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தி பிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் முத்தையா அடுத்து இயக்கும் படத்தின் தலைப்பு தேவராட்டம். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது கவுதம் கார்த்திக். இவரும் ஏற்கெனவே குறிப்பிட்ட ஜாதியை உயர்த்திப் பிடிக்கும் முத்துராமலிங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தப் படத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இது மீண்டும் ஒரு ஜாதி படமா என்பது படத்தின் முழு அறிவிப்பு வந்த பிறகு தெரியவரும்.