மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தற்போது டாக் ஆப் த கோலிவுட் என்ன தெரியுமா? 'சீதக்காதி' படத்திற்காக விஜய்சேதுபதி போட்டுள்ள ஓல்டு கெட்டப் தான். வித்தியாசமான கதைகளிலும், கேரக்டர்களிலும் நடித்து வரும் விஜய்சேதுபதி தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் 'சீதக்காதி'யும் ஒன்று. 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இப்படத்தை இயக்குகிறார்.
இது விஜய்சேதுபதியின் 25 ஆவது படம். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி என மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். இதில் என்ன சிறப்பு என்றால்... மூன்று நாயகிகளுமே இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.
விஜய்சேதுபதிக்கு ஜோடியார்? 'வீடு' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற அர்ச்சனா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 'சீதக்காதி' படம் முழுவதும் வயதான கெட்டப்பிலேயே விஜய்சேதுபதி நடிக்கிறார்.
ஏற்கனவே ஆரஞ்சமிட்டாய் என்ற படத்தில் ஓல்டு கெட்டப்பில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். அந்த கெட்டப் எடுபடவில்லை. எனவே 'சீதக்காதி'யில் நடிக்கும் விஜய் சேதுபதியின் வயதான கேரக்டருக்கான மேக்கப்பை ஹாலிவுட் மேக்-அப் கலைஞர்களான கெவின் ஹனே, அலெக்ஸ் நேபிள் உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் ஆஸ்கர் விருது பெற்றவர்கள். இந்த மேக்-அப்பைப் போடுவதற்கு 4 மணி நேரம் பிடித்ததாக சொல்லப்படுகிறது. மேக்கப்பைக் கலைப்பதற்கு 1 மணி நேரம் ஆனதாம்.