'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தொடங்கப்பட்ட பிறகு இது அக்ஷய்குமார், காஜல் அகர்வால், மனோஜ் பாஜ்பாய் நடித்திருந்த இந்திப் படமான ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்தான் என்று செய்திகள் வெளிவந்தது. ஆனால் இதனை படத் தரப்பும், குறிப்பாக இயக்குனர் விக்னேஷ் சிவனும் மறுத்து வந்தனர். இந்த நிலையில் படம் வருகிற 12ந் தேதி வெளிவருவதை தொடர்ந்து நடந்த அறிமுக நிகழ்ச்சியில் இது ரீமேக் படம்தான் என்பதை இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் ஒப்புக் கொண்டனர்.
"நான் ஸ்பெஷல் 26 படத்தின் உரிமையை வாங்கி. அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். அந்தப் படத்தின் ஒன்லைன் தவிர மற்ற அனைத்தும் தமிழுக்காக புதிய திரைக்கதை அமைத்து கலர்புல்லான படமாக இதனை உருவாக்கி இருக்கிறேன்" என்றார் விக்னேஷ் சிவன்.
"தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறிவருகிறோம். ஆனால் அந்த படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விக்கி இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார். கடின உழைப்பை போடாமல் சூர்யா ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும். அயன் படத்தில் வருவது போல் பிரெஷானா சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம்" என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.