மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள மூன்றாவது படம் "2.O". சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது. ரஜினியுடன், ஹிந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரும் முதன்மை ரோலில் நடித்திருக்கின்றனர். ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருந்த இந்தப்படம், கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் ஏப்ரல் 14-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக படத்தின் டீசரும், டிரைலரும் தாமதமானது.
இந்நிலையில், ஜனவரி 6-ம் தேதி, 2.O டீசர் வெளியாகயிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகினரின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. இதில் ரஜினியும் பங்கேற்பதால் அங்கு வைத்தே படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.