2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சமீபத்தில் மஸ்கட்டில் நடைபெற்ற தனியார் நகைக்கடை துவக்க விழாவில் கலந்துகொண்டார் அதன் தென்னிந்திய விளம்பர தூதர்களில் ஒருவரான மஞ்சு வாரியர். மேலும் நடிகர்கள் பிரபு, நாகார்ஜுனா, சிவராஜ்குமார் ஆகியோருடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு திரும்பியபின், ஷாருக்கான் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.
“சினிமாவிலும் டிவியிலும் மட்டுமே பார்த்துவந்த ஷாருக்கானை இப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறேன்.. ஷாருக் எபெக்ட் என்பதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அன்றுதான் நேரில் உணர்ந்தேன். நான் உங்களுக்கு நெருக்கமானவளாக உணர்கிறேன். நீங்கள் பாடிய பாடலை புத்தாண்டு பரிசாக எடுத்துக்கொள்கிறேன்” என ஒரு ரசிகையின் பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.
இந்த நிகழ்வில் மஞ்சு வாரியாரை அருகில் வைத்துக்கொண்டு, ஷாருக்கான் தனது 'தில்வாலே துல்ஹானியா லி ஜயேங்கே' படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலை பாடியதுதான் மஞ்சுவின் இந்த பரவசத்துக்கு காரணம்.