மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்த மிகப் பிரம்மாண்டமான படமாக உருவாகி வரும் படம் 'சை ரா நரசிம்ம ரெட்டி'. இந்தப் படத்தை தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார். தமிழ் நடிகரான விஜய் சேதுபதி, இப்படம் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்தது. இப்போது அவர் நடிக்க உள்ள கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தில் அவர் சிரஞ்சீவி நடிக்கும் கதாபாத்திரமான 'சை ரா நரசிம்ம ரெட்டி' கதாபாத்திரத்தின் வலதுகரமாக 'ஒப்பாயா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். சை ராவின் நம்பிக்கைக்கு உகந்தவராக இருந்தவராம் ஒப்பாயா.
இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் விஜய் சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது.